இந்தியாவில் இருந்து இந்திய கனடியருக்கு பண மிரட்டல் 

இந்தியாவில் இருந்து இந்திய கனடியருக்கு பண மிரட்டல் 

கனடாவின் எட்மன்டன் பகுதியில் வீடு கட்டும் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு இந்தியாவில் இருந்து பண மிரட்டல்கள் வருவதாகவும், அடிபணியாதோர் மீது தீ வைப்பு, துப்பாக்கி சூடு போன்ற வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும் Dave Paton என்ற Edmonton Police அதிகாரி கூறியுள்ளார்.

இவ்வாறு மிரட்டல்களுக்கு உள்ளானோரை தம்முடன் தொடர்புகொண்டு விபரங்களை வழங்குமாறும் எட்மன்டன் போலீசார் கேட்டுள்ளனர்.

தற்போது 5 பண மிரட்டல், 15 தீவைப்பு, 7 துப்பாக்கி மூல வன்முறைகள் ஆகியன எட்மன்டன் போலீசால் விசாரணை செய்யப்படுகின்றன. அத்துடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டும் உள்ளனர். ஒருவர் இந்தியாவுக்கு தப்பி ஓடியுள்ளார்.

இந்தியாவில் உள்ள வன்முறையாளர் WhatsApp மூலமே கனேடியர்களை தொடர்பு கொண்டு மிரட்டுகின்றனர்.

Ontario, British Columbia ஆகிய மாநிலங்களிலும் இவ்வகை மிரட்டல்கள் இடம்பெறுகின்றன. Toronto நகரை அண்டிய Peel Regional போலீசாரும் இவ்வகை விசாரணை ஒன்றை கடந்த மாதம் ஆரம்பித்து உள்ளனர்.

ஏற்கனவே சீக்கியர் விவகாரத்தால் முறுகல் நிலையில் உள்ள கனடிய-இந்திய உறவு மேற்படி விசாரணைகளை மேலும் குழப்பம் அடைய செய்யும்.