இந்தியாவில் இலங்கை நடிகையின் Rs 7 கோடி முடக்கம்

இந்தியாவில் இலங்கை நடிகையின் Rs 7 கோடி முடக்கம்

இலங்கை நடிகையான Jacqueline Fernandez (Miss Universe Sri Lanka 2006) என்பவரின் 7 கோடி இந்திய ரூபாய்கள் இந்திய அரசால் முடக்கப்பட்டு உள்ளது. இந்த பணம் ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்களில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் (Sukesh Chandrashekhar) என்பவரின் பணம் என்று கூறுகின்றனர் இந்திய அதிகாரிகள்.

கர்நாடக மாநிலத்து பெங்களூர் நபரான சுகேஷ் சிறு வயதில் இருந்தே சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக இந்திய அதிகாரிகள் கூறி உள்ளனர். பின்னர் இவர் சென்னை நகருக்கு இடம்பெயர்ந்து அங்கும் extortion மற்றும் மக்களை ஏமாற்றும் வேலைகளை தொடர்ந்துள்ளார் என்கிறது அரசு.

இவர் மீது தற்போது 200 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான குற்ற வழக்குகள் பதியப்பட்டு உள்ளன. இவரிடம் இருந்து சென்னை கடற்கரையோர வீடு, Ferrari, Bentley, Rolls Royce உட்பட 23 கார்கள் என்பன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இவரின் பணமே 36 வயதுடைய Jacqueline என்ற இலங்கை நடிகையிடம் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இலங்கை நடிகையான Jacqueline பின்னர் இந்தியா சென்று அங்கும் நடிகையாக பணியாற்றியுள்ளார். Jacqueline தான் குற்றவாளி இல்லை என்று கூறுகிறார்.

சுகேஷுக்கு உதவினார் என்ற காரணத்தால் டெல்லி Rohini சிறைச்சாலை அதிகாரியான Prakash Chand, வயது 57, என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.