இந்தியாவில் கடும்வெப்பம், 500 வரை மரணம்

IndiaHeat

இந்தியாவின் பல மாநிலங்களில் நிலவி வரும் கடும்வெப்பநிலை காரணமாக சுமார் 500 நபர்கள் மரணமாகியுள்ளதாக கூறப்படுகிறது. பெருமளவு மரணங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலேயே இடம்பெற்றுள்ளன. தலைநகர் டில்லியிலும் பெருமளவில் மரணமடைந்துள்ளனர். கட்டிட வேலை செய்வோர், முதியோர், வீதிகளில் உறங்குவோர் ஆகியோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
.
இந்தியாவின் தலைநகர் டில்லியில் வெப்பநிலை 45.5 C ஐ அடைந்துள்ளது. மற்றைய சில இடங்களில் வெப்பநிலை சுமார் 47 C ஆகியிருக்கிறது.
.
அரசு மக்களை அதிகம் நீர் அருந்துமாறும், குடையை பயன்படுத்துமாறும், பருத்தி உடைகளை அணியுமாரும் கூறியுள்ளது.
.

இந்திய வானிலை அறிவிப்பின்படி இந்த மாதம் 31 ஆம் திகதி வரை இந்நிலை நீடிக்கலாம். வரும் 31 ஆம் திகதி அளவில் வரவுள்ள சூறாவளியின் பின்னரே வெப்பநிலை குறையும்.