இந்தியாவில் கணவன் கொலை, கனடிய மனைவி விசாரணையில்

Jaskaran

Jaskaran Singh என்ற 38 வயதுடைய கனடிய பிரசை ஒருவர் மார்ச் மாதம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள Sawara என்ற இடத்தில் சிலரால் கொலை செய்யப்பட்டு இருந்தார். இவர் கனடாவின் டொரண்டோ நகரில் வசிக்கும் Pawandeep Kaur என்ற தனது மனைவியை பிரிந்து சென்று பஞ்சாப்பில் வாழ்ந்து வந்தவர். இவர்களுக்கு தற்போது தாயுடன் வாழும் இரண்டு பிள்ளைகளும் உண்டு.
.
பிரிந்து வாழ்ந்தாலும், கணவனின் மரணத்தின் பின் மனைவி இந்தியா சென்று மரணவீட்டில் பங்கு கொண்டிருந்தார்.
.
ஆனால் தற்போது, விசாரணைகளின் பின், மனைவியே கூலிக்கு ஆள் அமர்த்தி கணவனை கொலை செய்துள்ளதாக இந்திய பொலிசார் கூறுகின்றனர். மரண வீட்டின்போது அது தெரியாதபடியாலேயே தாம் மனைவியை கைது செய்யவில்லை என்கின்றனர் இந்திய பொலிசார். தற்போது இந்திய பொலிசார் முறைப்படி கனடிய பொலிசாரின் உதவியை நாடுகின்றனர்.
.
கொலைக்கு கூலியாக, இரண்டு தொகைகளில், மொத்தம் 270,000 இந்திய நாணயங்கள் (சுமார் $5,200) மனைவியால் கொலையாளிகளுக்கு அனுப்பப்பட்டு இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் பணம் அனுப்ப மனைவி இணங்கி உள்ளார் என்கிறார் ஒரு கொலையாளி.

.