இந்தியாவில் சனநாயகம் அழியும், நீதிபதிகள் எச்சரிக்கை

India

தற்போதைய நிலைமைகள் தொடர்ந்தால் இந்திய சனநாயகம் விரைவில் அழிந்துவிடும் என்று 4 உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்து உள்ளனர். வரலாற்றில் என்றும் இடம்பெறாத வகை பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் இந்த எச்சரிக்ககை விடப்பட்டு உள்ளது. இந்த எச்சரிக்கையின் பிரதான குற்றச்சாட்டுக்கள் உச்சநீதிமன்றின் தலைமை நீதிபதி (Chief Justice) Dipak Misra மீதே விடப்பட்டு உள்ளன.
.
மொத்தம் 25 நீதிபதிகளை கொண்ட இந்திய உச்சநீதிமன்றின் 4 நீதிபதிகள் மட்டுமே இவ்வாறு என்றுமில்லாதவாறு இந்திய நீதி துறையை சாடி இருந்தாலும், இந்த கிளர்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விடயத்தை கலந்துரையாட பிரதமர் மோதி விசேட கூட்டம் ஒன்றையும் திட்டமிட்டுள்ளார் .
.
Jasti Chelameswar, Ranjan Gogoi, Madan Lokur, Kurain Joseph ஆகிய நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளே இன்று வெள்ளிக்கிழமை Jasti Chelameswar வீட்டில் இந்த பத்திரிகையாளர் மாநாட்டை நிகழ்த்தி உள்ளனர்.
.
முக்கியமான புள்ளிகள் சம்பந்தப்ட்ட வழக்குகளை தலைமை நீதிபதி விரும்பும் தீர்வுகளை வழங்கக்கூடிய நீதிபதிகளிடம் வழங்குவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
.
2014 ஆம் ஆண்டில் B. H. Loya என்ற ஒரு கீழ் நீதிமன்ற நீதிபதி மரணம் அடைந்திருந்தார். இவரின் மரணம் பா.ஜ. கட்சி அரசியல்வாதி Amit Shahவின் மீதான கொலை வழக்கு ஒன்றின் தீர்ப்பை கூற சில நாட்கள் இருக்கையிலேயே இடம்பெற்று உள்ளது. பின்னர் Shahவின் வழக்கை கையாண்ட நீதிபதி Shah மீது வழக்கு தொடர்ந்தமை முறையல்ல என்று கூறி அந்த அரசியல்வாதியை விடுவித்து இருந்தார். தற்போது நீதிபதி Loya வின் மரணம் கொலையா என்று அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.
.

இன்னோர் விடயத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் மீதான ஊழல் குற்றச்சாட்டும் முறையாக இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் நீதிபதி Chelameswar எடுத்த தீர்மானத்தை தலைமை நீதிபதி இரத்து செய்திருந்தார்.
.