இந்தியாவில் பாரிய வெங்காய தட்டுப்பாடு

India-Onion

சீனாவுக்கு அடுத்ததாக உலகில் அதிகம் வெங்காயத்தை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. அத்துடன் வெங்காயம் இந்தியர்களின் சமையலில் ஓர் முக்கிய அங்கமாகும். இந்தியர்கள் வருடம் ஒன்றுக்கு சுமார் 16.5 மில்லியன் தொன் வெங்காயத்தை கொள்வனவு செய்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் வெங்காயத்துக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த பாரிய தட்டுப்பாடு காரணமாக ஒரு Kg வெங்காயத்தின் விலை Rs 100.00 வரைக்கு உயர்ந்துள்ளது. சில மாதங்களின் முன் ஒரு Kg Rs 25.00 ஆக இருந்துள்ளது. இந்த அதீத விலை உயர்வு அண்மையில் நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆளும் கட்சிகளுக்கு பாதகமாகவும் அமையலாம். 1980 மற்றும் 1998 களில் நடைபெற்ற தேர்தல்களிலும் வெங்காய விலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

அண்மைக்காலங்களில் இந்தியாவில் இடம்பெற்றுவரும் பாதகமான காலநிலைகளே இந்த தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணியாக கருதப்படுகிறது. அனால் பதுக்கல் மற்றும் பெரும் வர்த்தகர்களின் விலை speculation என்பனவும் காரணமாகும். இந்தியாவின் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் சுமார் 45% வெங்காயத்தை உற்பத்தி செய்கின்றன.

தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த பாகிஸ்தான், ஈரான், சீன, மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யப்போவதாக மத்திய அரசின் National Agricultural Cooperative Marketing Federation கூறியுள்ளது.