இந்தியாவில் 122 ஆண்டுகளில் அதிக வெப்பம்

இந்தியாவில் 122 ஆண்டுகளில் அதிக வெப்பம்

இந்தியாவை மீண்டும் வெப்பம் தாக்க ஆரம்பித்து உள்ளது. வழமைக்கு மாறாக இந்த ஆண்டு வெப்பம் சில கிழமைகள் முன்னதாகவே தாக்க ஆரம்பித்து. இந்தியா 122 ஆண்டுகளாக வெப்பநிலையை பதிவு செய்கிறது. அதன்படி மார்ச் சராசரி வெப்பநிலை 122 ஆண்டுகளில் அதிகமாக இருந்துள்ளது.

தலைநகர் டெல்லி பகுதியில் தற்போது வெப்பநிலை 40 C ஆக உள்ளது. வரும் ஞாயிறு வரை வெப்ப கொடுமை தொடரும் என்றும், வெப்பநிலை 44 C ஆக உயரும் என்றும் கூறப்படுகிறது.

கடும் வெப்பம் காரணமாக பல இடங்களில் தீ பரவ ஆரம்பித்து உள்ளது. தலைநகருக்கு வடமேற்கே உள்ள Bhalswa என்ற கழிவு கொண்டும் இடத்திலும் தீ ஆரம்பித்து உள்ளது. தீ தவிர்ப்பு வழிகளை நடைமுறை செய்யுமாறு பிரதமர் மோதி கேட்டுள்ளார்.

இந்திய எல்லையோரம் உள்ள பாகிஸ்தானின் பகுதிகளும் கூடவே வெப்ப கொடுமைக்கு உள்ளாகியுள்ளன. ஜூன் மாத monsoon மழைக்காலம் ஆரம்பிக்கும் வரை வெப்ப கொடுமை தொடரும்.