இந்தியாவில் 8 வயதில் துறவியான செல்வந்த சிறுமி

இந்தியாவில் 8 வயதில் துறவியான செல்வந்த சிறுமி

இந்தியாவில் செல்வம் மிக்க 8 வயது ஜெயின் (Jain) மத சிறுமி ஒருத்தி துறவி ஆக்கியுள்ளார். Devanshi Sanghvi என்ற இந்த சிறுமியின் தந்தை சுமார் $61 மில்லின் பெறுமதியான வைர வர்த்தகர்.

குயாரத் மாநிலத்தில் உள்ள Surat என்ற வைர நகரில் வாழும் இவரின் குடும்பம் ஜெயின் மதத்தை பின்பற்றுபவர்கள். ஜெயின் மதம் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்தது. மாமிசம் உண்ணாத இவர்கள் சிறு உயிர்களை கொல்லப்படுவதையும் தவிர்ப்பவர்கள்.

நாலு தினங்கள் இடம்பெற்ற விழாவில் இந்த சிறுமி யானை இழுத்த வண்டியில் வலம்வந்தார். புதன்கிழமை ஜெயின் ஆலயம் சென்ற இவர் தனது விலை உயர்ந்த ஆடைக்கு பதிலாக துறவிகளின் ஆடையை பெற்றுக்கொண்டார். இதை diksha அல்லது துறவியாதல் நிகழ்வு என்பர்.

சிறுமி துறவியாக அவரின் பெற்றாரும் காரணமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. சுமார் 4 மில்லியன் ஜெயின் மதத்தினர் வாழும் இந்தியாவில் குடும்ப உறுப்பினர் துறவி ஆவது பெருமைக்குரியது.

2016ம் ஆண்டு 13 வயது ஜெயின் சிறுமி ஒருத்தி இரண்டு மாத கால விரதம் ஒன்றின் பின் மரணித்து இருந்தாள். இந்த விரத காலத்தில் அவள் நாளுக்கு இரண்டு தடவைகள் சூடான நீரை மட்டுமே அருந்தியிருந்தாள். இவளின் பெற்றார் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.