இந்தியாவுக்கு ரஷ்ய S-400 ஏவுகணை, அமெரிக்கா தண்டிக்குமா?

இந்தியாவுக்கு ரஷ்ய S-400 ஏவுகணை, அமெரிக்கா தண்டிக்குமா?

ஏற்கனவே கொள்வனவு செய்ய இணங்கியபடி ரஷ்யாவின் S-400 என்ற ஏவுகணை இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியா வரவுள்ளன என்று ரஷ்ய இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆனால் 2017ம் ஆண்டு அமெரிக்கா நடைமுறை செய்த சட்டம் ஒன்றின்படி S-400 ஏவுகணையை கொள்வனவு செய்யும் நாடுகளை அமெரிக்கா தண்டிக்கவேண்டும். அந்த சட்டப்படி இந்தியாவையும் அமெரிக்கா தண்டிக்குமா என்பது இதுவரை அறியப்படவில்லை.

அமெரிக்காவின் மேற்படி சட்டம் Countering America’s Adversaries Sanctions Act (CAATSA) என்று அழைக்கப்படும்.

துருக்கி ஒரு NATO நாடாக இருந்தும் அது ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணைகளை கொள்வனவு செய்ததால் அமெரிக்கா துருக்கி மீது தடைகளை விதித்தது. துருக்கிக்கு விற்பனை செய்யவிருந்த அமெரிக்காவின் புதிய F-35 யுத்த விமான விற்பனையை அமெரிக்கா நிறுத்தி இருந்தது.

ஆனாலும் இந்தியாவை அமெரிக்கா தண்டிக்க முடியாத நிலையில் உள்ளது. சீனாவை கட்டுப்படுத்த இந்தியாவின் உறவு அமெரிக்காவுக்கு அவசியம். அதனால் தனது விசனத்தை கட்டுப்படுத்தி அமெரிக்கா இந்தியாவின் S-400 கொள்வனவுக்கு விதிவிலக்கு அளிக்கலாம். அமெரிக்க விசா வழங்க மறுக்கப்பட்ட மோதிக்கு, அவர் பிரதமர் ஆகிய பின் வேறுவழி இன்றி அமெரிக்கா விசா வழங்கி வெள்ளை மாளிகைக்கு அழைத்து இருந்தது.

இந்த ஏவுகணை கொள்வனவுக்கு இந்தியா $5.5 பில்லியன் செலுத்துகிறது.

நிலத்தில் இருந்து வானத்துக்கான (long-range surface-to-air) ஏவுகணைகளில் S-400 உலகில் மிக சிறந்தது.