இந்தியாவுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பால் $100 பில்லியன்

இந்தியாவுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பால் $100 பில்லியன்

இந்த ஆண்டு இந்தியா வெளிநாட்டு வேலைவாய்ப்பால் சுமார் $100 பில்லியன் (remittance) வருமானத்தை பெறும் என்று உலக வங்கி கூறியுள்ளது. பல ஆண்டுகளாக இவ்வகை வருமானத்தை உலக அளவில் அதிகம் பெறும் நாடு இந்தியாவே.

2021ம் ஆண்டு இந்தியா சுமார் $87 பில்லியன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலமான வருமானத்தை பெற்று இருந்தது. இந்த ஆண்டு அத்தொகை சுமார் 12% ஆல் அதிகரிக்கும் என்று உலக வங்கி கணிப்பிடுகிறது. இதில் பெருமளவு தொகை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கிடைக்கும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் 2021ம் ஆண்டு அதிகம் வருமானம் பெற்ற முதல் 10 நாடுகள்:

1. இந்திய $87 பில்லியன்
2. சீனா $53 பில்லியன்
3. மெக்ஸிகோ $53 பில்லியன்
4. பிலிப்பீன்ஸ் $36 பில்லியன்
5. எகிப்து $33.3 பில்லியன்
6. பாகிஸ்தான் $33 பில்லியன்
7. பங்களாதேசம் $23 பில்லியன்
8. நைஜீரியா $18 பில்லியன்
9. வியட்நாம் $18 பில்லியன்
10. நேபாள் $8.5 பில்லியன்

இவ்வகை வருமானம் லத்தீன் அமெரிக்கா நாடுகளில் 9.3% ஆலும், இந்தியா தவிர்ந்த தென்னாசிய நாடுகளில் 3.5% ஆலும் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு இலங்கை இவ்வகை வருமானமாக $5.49 பில்லியனை மட்டுமே பெற்று இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிக குறைந்த தொகையாகும். 2012ம் ஆண்டு இலங்கைக்கு இவ்வகை வருமானமாக $5.98 பில்லியன் கிடைத்து இருந்தது.