இந்தியா வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு திடீர் தடை

இந்தியா வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு திடீர் தடை

இந்தியா பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி (non-basmati white rice) ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. அதனால் உலக சந்தை சுமார் 2 மில்லியன் தொன் அரிசியை இழக்கும் என்று கூறப்படுகிறது.

சுமார் $1 பில்லியன் பெறுமதியான அரிசி இழப்பீடு உலக சந்தையில், குறிப்பாக இந்திய அரிசியை இறக்குமதி செய்யும் நாடுகளில், அரிசி விலையை அதிகரிக்க செய்யும்.

உலகுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் 40% அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்கிறது.

தற்போது துறிமுகங்களில் உள்ள அரிசி தடையின்றி ஏற்றுமதி செய்யப்படும். ஏனைய ஏற்றுமதி ஒப்பந்தங்கள் கைவிடப்படும். இந்த தடை ஜூலை 20ம் திகதி முதல் நடைமுறையில் உள்ளது.

இந்தியாவில் அரிசி விலை வேகமாக அதிகரித்தாலேயே அரசு இந்த தடையை நடைமுறை செய்துள்ளது.

தடை எப்போது தளர்த்தப்படும் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்தியா மாதம் ஒன்றில் சுமார் 500,000 மில்லியன் தொன் அரிசியை ஏற்றுமதி செய்கிறது. Benin, Senegal, Ivory Coast, Togo, Guinea, பங்களாதேசம், நேபாளம் ஆகிய நாடுகள் இந்திய அரிசியை கொள்வனவு செய்யும் முன்னனி நாடுகள்.