இந்திய கலம் சந்திரனில் பத்திரமாக இறங்கியது

இந்திய கலம் சந்திரனில் பத்திரமாக இறங்கியது

Chandrayaan-3 என்ற இந்திய கலம் சந்திரனின் தென் துருவ பகுதியில் இன்று புதன்கிழமை பத்திரமாக இறங்கி உள்ளது. 

இதனால் சந்திரனின் தென் துருவத்தில் இறங்கிய முதலாவது நாடாகிறது இந்தியா. Chandrayaan-2 தரையில் மோதி உடைந்திருந்தது.

Vikram என்ற தரை இறங்கும் கலத்துள் (lander) உள்ள Pragyaan என்ற 6 சக்கரங்கள் கொண்ட ஆய்வு கலம் (rover) சந்திரனின் தரையில் வலம்வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். சந்திரனின் தென் துருவத்தில் உறைந்த நீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவ்வாறு நீர் இருந்தால் அது விண்வெளி வீரர்களுக்கு நன்கு பயன்படும்.

ரஷ்யாவின் தென் துருவத்தில் இறங்கும் முயற்சி, Luna-25 தரையில் மோதி உடைந்ததால், அண்மையில் தோல்வியில் முடிந்திருந்தது.