இந்திய பிபிசி அலுவலகங்கள் தேடுதலில், மோதி ஆவணம் காரணம்

இந்திய பிபிசி அலுவலகங்கள் தேடுதலில், மோதி ஆவணம் காரணம்

பிபிசி செய்தி சேவைக்கு சொந்தமான டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்கள் இந்திய அதிகாரிகளால் தீடீரென தேடுதலுக்கு உள்ளாகின. இந்த தேடுதலுக்கு காரணம் அண்மையில் பிபிசி வெளியிட்ட மோதி தொடர்பான ஆவணமே என்றாலும், வருமான வரி திணைக்களமே தேடுதலை செய்துள்ளது.

2002ம் ஆண்டு மோதி குஜராத்தின் முதல்வராக பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான இந்த ஆவணப்படம் பிரித்தானியாவில் மட்டுமே வெளிவந்திருந்தாலும், இந்தியர் இதை இணையம் மூலம் பார்த்தால் மோதி கட்சி விசனம் கொண்டுள்ளது.

ஆவேசம் கொண்ட மோதி எதிர்ப்பு நபர்களே இந்த ஆவணத்தை பொய்யான தரவுகள் கொண்டு தயாரித்ததாக மோதி தரப்பு கூறுகிறது. ஆனால் அமெரிக்காவும் இதே காரணத்துக்காக மோதிக்கு விசா வழங்க மறுத்து இருந்தது. மோதி இந்திய பிரதமர் ஆக உள்ளார் என்று தெரிந்ததும், எதிர்ப்பை கைவிடு மோதிக்கு செங்கம்பளம் விரித்து அமெரிக்கா. பிரித்தானியாவும் இவ்வாறே கொப்பு தாவியது.

அமெரிக்காவின் இந்தியா மீதனா அன்பு, சீனா மீதான வெறுப்பு காரணமானதே. ஒன்று இல்லையேல், மற்றது இல்லை. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நிலவிய முறுகல் நிலையாலேயே இலங்கை எரிந்தது, கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆனது.

2020ம் ஆண்டு Amnesty International என்ற தொண்டர் அமைப்பும் மோதி அரசின் அழுத்தங்கள் காரணமாக இந்தியாவில் தனது நடவடிக்கைகளை நிறுத்தி இருந்தது.

கடந்த ஆண்டு Oxfam என்ற தொண்டர் அமைப்பின் அலுவலகமும் தேடுதல் செய்யப்பட்டது.