இந்திய பெட்ரோல், டீசல் இலங்கை வந்தன

இந்திய பெட்ரோல், டீசல் இலங்கை வந்தன

இந்தியா வழங்கும் 36,000 தொன் பெட்ரோலும், 40,000 தொன் டீசலும் இன்று புதன் இலங்கை வந்துள்ளன என்று கூறுகிறது இலங்கையில் உள்ள இந்திய தூதரகம்.

மேற்படி எரிபொருள் இரண்டு தொகுதிகளாக இலங்கை வந்துள்ளன.

இன்றைய வரவுடன் இந்தியா வழங்கிய எரிபொருள் அளவு 270,000 தொன் ஆக உள்ளது. இந்த உதவி இந்தியாவின் $500 மில்லியன் எரிபொருள் Line of Credit சலுகையின் கீழ் வழங்கப்படுகிறது.

முன்னாள் கிறிக்கெட் வீரரான அர்ஜுனா ரணதுங்க எரிபொருள் வழங்கும் இந்தியாவை பாராட்டி உள்ளார். இந்தியா இலங்கையர்க்கு மூத்த அண்ணன் போல உதவுகிறது என்று அவர் கூறியுள்ளார்.