இந்திய போலீஸ் தாக்குதலுக்கு 24 மாவோயிஸ்ட் பலி

India

இந்தியாவில் இயங்கிவரும் மாவோயிஸ்ட் இயக்க உறுப்பினர் 24 பேரை இந்திய போலீசார் தாக்கி கொலை செய்துள்ளார். 1967 ஆம் ஆண்டு முதல் இடதுசாரி கொள்கைகளுடன் போராடிவரும் இந்த இயக்கமானது சீனாவின் தலைவர் மாஓ ஜெடொங் நாமத்தை தமது இயக்கத்துக்கு கொடுள்ளது. இந்த தாக்குதலில் போலீசார் ஒருவரும் கொள்ளப்பட்டு உள்ளார்.
.
இந்த குழு ஒடிசா-ஆந்திரா எல்லை காடுகளில் கூடி இருந்ததை அறிந்த போலீசார் சுற்றிவளைத்து தாக்கி உள்ளனர். நேற்று ஞாயிறு போலீசுக்கு கிடைத்த தகவலை அடுத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றது.
.
இந்த குழு மேற்கு வங்காளத்தில் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் என்றாலும் தற்போது 20 மாநிலங்களில் இயங்கி வருகிறது. பொதுவாக இவர்கள் இயங்கும் மாநிலங்கள் இந்தியாவின் வறிய மாநிலங்கள் ஆகும்.
.

2008 ஆம் ஆண்டில், போலீசார் சென்ற வாகனம் ஒன்றை இக்குழு தாக்கியபோது 18 போலீசார் பலியாகி இருந்தனர்.
.