இந்திய மக்கள் சபை தேர்தல் 2014

LokSabha

இந்தியாவின் Lok Sabha வுக்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகின்றது. 2014-04-07 முதல் நடைபெறும் தேர்தல் மற்றும் வாக்கு கணக்கெடுப்பு எல்லாம் முடிவடைய சுமார் ஒரு மாதம் எடுக்கலாம். முதல் நாளில் அஸ்ஸாம், திரிபுரா போன்ற பகுதிகளில் வாக்கு பதிவு தொடங்கி இறுதியில் மேற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் முடிவடையும். இந்த தேர்தலில் 814,500,000 வரையானோர் வாக்களிக்க தகுதி கொண்டுள்ளனர், ஆனால் சுமார் 55% மட்டுமே வாக்களிக்கும். தற்போது Lok Sabha வின் மொத்த ஆசனங்கள் 543.

தற்போது காங்கிரஸ் தனது 229 ஆசனங்களையும், அதன் கூட்டணிகளின் 47 ஆசனங்களையும் கொண்டு பதவியில் இருந்தாலும் இக்கூட்டு மீண்டும் பதவிக்கு வரும் என்பது சந்தேகமே. மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி (BJP) இம்முறை ஆட்சி அமைக்கலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது. தற்போது BJP யிடம் 112 ஆசனங்கள் மட்டுமே உள்ளன.

ஆனால் BJP இனால் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போதிய ஆசனங்களை பெற முடியுமா என்பதுவும் சந்தேகமே. அவ்வாறு BJP அறுதி பெரும்பான்மையை பெற தவறின், வேறு முன்னை கட்சிகளுடன் கூட்டு அமைக்கவேண்டய கட்டாயத்துக்கு உட்படலாம். அதற்கு BJP, தமிழ் நாட்டின் ஜெயலலிதா (இவரின் கட்சி இம்முறை 20 ஆசனங்களை பெறக்கூடும்), மேற்கு வங்க Mamata (இவரின் கட்சி இம்முறை 25 ஆசனங்களை பெறக்கூடும்), உத்தர பிரதேச மாயாவதி (இவரின் கட்சி இம்முறை 20 ஆசனங்களை பெறக்கூடும்) ஆகியோரின் உதவியை நாடலாம்.

உத்தர பிரதேசம் (80 ஆசனம்), மகாராஷ்டிரா (48 ஆசனம்), மேற்கு வங்காளம் (42 ஆசனம்), ஆந்திரா (42 ஆசனம்), பீகார் (40 ஆசனம்), தமிழ் நாடு (39 ஆசனம்) ஆகிய மாநிலங்களே அதிகம் ஆசனங்களை கொண்ட மாநிலங்கள் ஆகும்.
மோடி முஸ்லீம்களின் வெறுப்பை அதிகம் பெற்றவர் என்பதால், மோடிக்கு ஆதரவு வழங்க முனையும் மாற்று கட்சிகள் தமது முஸ்லீம் வாக்குக்களையும் கருத்தில் கொள்ளல் வேண்டும். ஜெயலலிதாவே மிக குறைந்த அளவில் முஸ்லீம் வாக்குக்களில் தங்கி உள்ளார். ஆனால் ஜெயலலிதாவின் ஆதரவு நிலையானதாக இருக்காது. இவர் எந்த நேரமும் கட்சி ஆதரவை முறிக்கக்கூடியவர்.

1947 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையான 67 வருடங்களில் 13 வருடங்களில் மட்டுமே காங்கிரஸ் பதவியில் இருந்திருக்கவில்லை.