இந்திய மருந்துக்கு 18 உஸ்பெஸ்கிஸ்தான் சிறுவர் பலி

இந்திய மருந்துக்கு 18 உஸ்பெஸ்கிஸ்தான் சிறுவர் பலி

Marion Biotech என்ற இந்திய மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் மருந்தை அருந்திய 18 உஸ்பெஸ்கிஸ்தான் (Uzbekistan) நாட்டு சிறுவர்கள் பலியாகி உள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.

Marion Biotech Pvt Ltd என்ற இந்திய நிறுவனம் தயாரித்த Doc-1 Max Syrup என்ற மருந்தே மரணங்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த மருந்தை சுவாசம் தொடர்பான (respiratory) அவதிக்கு உட்படும் சிறுவர்களுக்கு வழங்கிய பின்னரே சிறுவர்கள் மரணித்து உள்ளனர்.

இந்த மருந்தை உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் உள்ள Quramax Medical LLC என்ற நிறுவனம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

இந்த மருந்தில் ethylene glycol என்ற இரசாயனம் உள்ளதாகவும், அது நச்சு தன்மை கொண்டது என்றும் உஸ்பெஸ்கிஸ்தான் சுகாதார அமைச்சு கூறுகிறது.

Doc-1 Max Syrup மருந்தை உஸ்பெஸ்கிஸ்தான் தற்போது பயன்பாட்டில் இருந்து இடைநிறுத்தி உள்ளது.

Gambia என்ற ஆபிரிக்க நாட்டுக்கு இந்தியா வழங்கி இன்னோர் மருந்து அங்கும் சுமார் 70 சிறுவர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்தது. அந்த மருந்தை டெல்லியை தளமாக கொண்ட Maiden Pharmaceuticals Ltd என்ற நிறுவனம் தயாரித்து இருந்தது.

வறுமை நிலையில் உள்ள நாடுகளுக்கு இந்தியாவே பெருமளவு மருந்துகளை விற்பனை செய்கிறது.