இந்திய மோதி, யூக்கிறேன் செலென்ஸ்கி சந்திப்பு

இந்திய மோதி, யூக்கிறேன் செலென்ஸ்கி சந்திப்பு

இந்திய பிரதமர் மோதியும், யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கியும் ஜப்பானில் இடம்பெறும் G7 அமர்வின் போது நேரடியாக சந்தித்து உரையாடி உள்ளனர். ரஷ்யா யூக்கிறேனை ஆக்கிரமித்த பின் இந்திய, யூக்கிறேன் தலைவர்கள் நேரடியாக சந்திப்பது இதுவே முதல் தடவை.

மேற்கு நாடுகள் ரஷ்யாவை கடுமையாக சாடி, தடைகளை விதித்தாலும் இந்தியா ரஷ்யாவை குற்றம் சாட்டியது இல்லை. அந்த நிலையை மாற்றி அமைக்க செலன்ஸ்கி மாற்றி அமைக்க முனைந்திருப்பார். ஆனால் அந்த முயற்சி பலன் அளித்திருந்ததாக இதுவரை அறியப்படவில்லை.

G7 அமர்வுக்கு ஜப்பான் சென்றிருந்த மோதி அங்கு விசேட அழைப்பில் சென்ற செலன்ஸ்கி இன்று சனிக்கிழமை சந்தியுள்ளார்.