இந்திய ரயில் விபத்துக்கு குறைந்தது 50 பேர் பலி

இந்திய ரயில் விபத்துக்கு குறைந்தது 50 பேர் பலி

இந்தியாவின் ஒடிஷா மாநிலத்து Balasore மாவட்டத்தில் இன்று வெள்ளி மாலை இடம்பெற்ற ரயில் விபத்துக்கு குறைந்தது 50 பேர் பலியாகி உள்ளனர். இரண்டு பயணிகள் ரயில்களும் ஒரு பொருட்களை காவும் ரயிலும் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

காயமடைந்த 300 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விபத்தில் சிக்கிய ஒரு ரயில் கல்கத்தாவில் இருந்து சென்னை பயணிக்கும் Shalimar-சென்னை-Coromandel Express என்று கூறப்படுகிறது.

தடம்புரண்ட ஒரு ரயில் மற்றைய ரயிலின் பாதைக்கு சென்று அந்த பாதையில் வந்த ரயிலுடன் மோதியதாக செய்திகள் கூறுகின்றன.

2016ம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் இடம்பெற்ற ரயில் விபத்துக்கு 140 பேர் பலியாகி இருந்தனர்.