இந்திய Colonel காசாவில் பலி, இந்தியா அதை புறக்கணிப்பு

இந்திய Colonel காசாவில் பலி, இந்தியா அதை புறக்கணிப்பு

முன்னாள் இந்திய இராணுவ Colonel Waibhav Anil Kale, வயது 46, திங்கள் காசாவில் இஸ்ரேல் தாக்குதலுக்கு பலியாகி உள்ளார். ஆனால் இந்திய வெளியுறவுஅமைச்சர் ஜெய்சங்கரும், வெளியுறவு அமைச்சும் இந்த மரணத்துக்கு கவலை தெரிவிக்கவில்லை.

Kale 11 ஆண்டுகள் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவத்தின் Rifles படையில் கடமையாற்றி 2022ம் ஆண்டு பதவி விலகி இருந்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன் இவர் ஐ.நாவின் Department of Safety and Security (DSS) அணியில் இணைந்து Security Coordination Officer ஆக காசாவில் பணியாற்றும் ஐ.நா. உறுப்பினருக்கு பாதுகாப்பு வழங்கி வந்தார். 

கடந்த திங்கள் இவர்கள் Rafah நகரில் உள்ள European Hospital நோக்கி பயணிக்கையில் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி உள்ளார்.

உடனே ஐ.நா. செயலாளர் Antonio Guterres தான் “deeply saddened” என்று கவலை தெரிவித்துள்ளார். 

ஆனால் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அதன் பின் பதிந்த மொத்தம் 12 X/Twitter பதிவுகள் எதிலும் Kale மரணத்துக்கு கவலை தெரிவித்து இருக்கவில்லை. அதேவேளை அவர் இஸ்ரேலின் 76ம் ஆண்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.