இந்தோனேசியாவில் 350 km/h வேக ரயில் சேவை

இந்தோனேசியாவில் 350 km/h வேக ரயில் சேவை

அக்டோபர் 1ம் திகதி முதல் மணித்தியாலத்துக்கு 350 km வேகத்தில் பயணிக்கக்கூடிய (350 km/h) ரயில் ஒன்று சேவைக்கு வந்துள்ளது. தற்போது தென் ஆசியாவில் இதுவே அதிவேக ரயில் சேவையாகும்.

இந்த ரயில் தலைநகர் Jakarta வுக்கும் Bandung என்ற இன்னோர் நகருக்கும் இடையில் சேவை செய்யும். தற்போது சாதாரண ரயில் மூலம் இந்த தூரத்தை கடக்க 3 மணித்தியாலங்களுக்கு அதிகம் எடுக்கும். ஆனால் புதிய ரயில் 30 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தையே எடுக்கும்.

சாதாரண ரயில் இந்த தூரத்துக்கு சுமார் $5 பணத்தை கட்டணமாக அறவிட, புதிய ரயில் $15 வரை கட்டணமாக அறவிடும் என்று கூறப்படுகிறது.

WHOOSH என்ற இந்த ரயில் சீனாவால் Belt-and-Road திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. இது 2019ம் ஆண்டு இது சேவைக்கு வர இருந்தாலும் கரோனா, நில கொள்வனவு இடர் ஆகிய காரணங்களால் 2023 வரை பின்னடைந்து.

இதற்காக முதலீடு பெருமளவில் சீனாவால் Belt and Road திட்டத்தின் கீழ் கடனாக வழங்கப்பட்டது.