இந்தோனோஷியாவில் 7.0 நிலநடுக்கம்

Indonesia

இந்தோனேசியாவின் Bali பகுதிக்கு அண்மையில் உள்ள Lombok தீவில் 7.0 அளவிலான நிலநடுக்கம் இன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தலாம் என்று அறிவித்திருந்தாலும், சுனாமி எச்சரிக்கை பின்னர் இரத்து செய்யப்பட்டுள்ளது.
.
உள்ளூர் நேரப்பபடி இந்த நடுக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 6:46 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த நடுக்கத்தின் மையம் சுமார் 10 km ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
.
இந்த நடுக்கத்துக்கு பின்னர் 5.4 மற்றும் 4.9 அளவிலான நடுக்கங்கள் உட்பட 12 சிறிய பின்நடுக்கங்களும் (aftershock) அப்பகுதியில் ஏற்பட்டுள்ளன.
.
இப்பகுதியில் ஒரு கிழமைக்கு முன்னர் இடம்பெற்ற 6.4 அளவிலான நிலநடுக்கத்துக்கு 16 பேர் பலியாகியும், 150 பேர் காயமடைந்தும் இருந்தனர்.
.
அழகிய கடற்கரைகளை கொண்ட இந்தோனேசியாவின் Bali பகுதி உல்லாச பயணிகளின் பிரதான இடமாகும்.
.
இந்தினேசியாவின் மேற்கு பகுதியில் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற 9.1 அளவிலான நிலநடுக்கம் உருவாக்கிய சுனாமிக்கு இந்துசமுத்திரத்தை அண்டிய நாடுகளில் மொத்தம் 230,000 மக்கள் பலியாகி இருந்தனர்.
.