இன்டர்போல் தலைவர் பதவி விலகினார்

HongWei

அண்மையில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த இன்டர்போல் தலைவர் சில நாட்களாக காணாமல் போயிருந்தார். அவர் தற்போது தனது இன்டர்போல் தலைவர் பதவியை விலகுவதாக கூறியுள்ளார். அதை அவர் சீனாவின் கட்டுபாட்டில் இருக்கையிலேயே கூறியுள்ளார்.
.
சீனாவின் புதிய ஜனாதிபதி Xi Jingping காலத்தில் பல முன்னாள் உயர் அதிகாரிகள் மீது ஊழல் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின் பல அதிகாரிகள் சிறைக்கும் சென்றுள்ளனர். அவ்வகை விசாரணை ஒன்றே Meng Hongwei என்ற இன்டர்போல் தலைவர் மீதும் ஆரம்பிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. Meng Hongwei முன்னாளில் சீன காவல்துறை அதிகாரியாகவும், பிரதி அமைச்சராகவும் பதவிகள் வகித்தவர்.
.
Meng Hongweiயும் அவரது மனைவி, பிள்ளைகளும் Lyon என்ற பிரான்ஸ் நாட்டு நகரத்திலேயே வசித்து வந்துள்ளனர். பிரான்சில் வசித்தாலும், அவர்கள் சீன பிரசைகளே. இன்டர்போலின் தலைமையகம் Lyon நகரிலேயே உள்ளது.
.
மேன் Hongweiயின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட இன்டர்போல் உபதலைவராக இருந்த Kim Jong-yang என்ற தென்கொரியரை தலைவர் ஆக்கியுள்ளது.
.
சில கிழமைகளுக்கு முன் சீனாவின் பிரபல நடிகையான Fan BingBing கும் சில நாட்களாக காணாமல் போயிருந்தார். பின்னர் அவர் மறைவிடம் ஒன்றில் இருந்து ஒரு அறிக்கையை விட்டிருந்தார். அந்த அறிக்கையில் தான் தனது முழு வருமானத்தையம் முறைப்படி வருமான வரி திணைக்களத்துக்கு அறிவிக்கவில்லை என்றும், செலுத்த தவறிய வரி மற்றும் தண்டம் உட்பட $129 மில்லியன் செலுத்த இணங்குவதாகவும் கூறியிருந்தார்.
.