இன்றில் இருந்து இராணியை கைவிடுகிறது Barbados

இன்றில் இருந்து இராணியை கைவிடுகிறது Barbados

பார்பேடோஸ் (Barbados) என்ற சிறிய Caribbean நாடும் இன்றில் இருந்து இராணியின் தலைமையை கைவிடுகிறது. இதுவரை 16 நாடுகள் இராணியை தமது நாட்டின் தலைமையாக கொண்டிருந்தாலும், இன்றிலிருந்து 15 நாடுகளே இராணியை தமது தலைமையாக கொண்டிருக்கும்.

நாளை செவ்வாய் அந்த நாட்டின் 56ஆவது சுதந்திர தினமாகும். 1620ம் ஆண்டு முதல் இது பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது.

Barbados 55 ஆண்டுகளுக்கு முன் சுதந்திரம் அடைந்து இருந்தாலும், இன்றுவரை பிரித்தானிய இராணியே அந்நாட்டின் சம்பிரதாய தலைமை ஆக இருந்தார். அந்நிலை கைவிடப்பட்டு, நாளை முதல் அந்த நாட்டின் முதலாவது சனாதிபதி Sandra Mason நாட்டின் தலைமை பதவியை ஏற்கிறார்.

தற்போது இராணியை தலைமையாக கொண்ட 15 நாடுகளில் அஸ்ரேலியா, Bahamas, கனடா, Jamaica, நியூசிலாந்து, பப்புவா நியூகினி, Solomon தீவுகள், பிரித்தானியா ஆகியனவும் அடங்கும். அதில் Jamaica அடுத்து இராணியை கைவிடலாம் என்று நம்பப்படுகிறது. Jamaicaவில் உள்ள இரண்டு முன்னணி காட்சிகள் இராணியை கைவிட விரும்புகின்றன.

இராணியை கைவிடாலும் Barbados தொடர்ந்தும் Commonwealth அமைப்பில் அங்கம் கொண்டிருக்கும்.

1992ம் ஆண்டு இந்து சமுத்திரத்தில் உள்ள Mauritius என்ற நாடு இராணியின் தலைமையை கைவிட்டு இருந்தது.