இன்று இரண்டாவது விண்வெளி உல்லாச பயணம்

இன்று இரண்டாவது விண்வெளி உல்லாச பயணம்

இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் Texas மாநிலத்தில் இருந்து இரண்டாவது விண்வெளி உல்லாச பயணம் காலை 8:15 மணிக்கு ஏவப்பட்டது. Amazon நிறுவனத்தை ஆரம்பித்த Jeff Bezos முதலீடு செய்து தயாரித்த Blue Origin என்ற ஏவுகணை New Shepard என்ற பயணிகளை கொண்ட கலத்தை அண்டத்துக்கு ஏவியது.

இந்த கலத்தில் உலகின் முதலாவது செல்வந்தர் Jeff Bezos (வயது 57), அவரின் சகோதரன் Mark Bezos (வயது 53), Oliver Daemen (வயது 18), Mary Wallace Funk (வயது 82) ஆகியோர் இன்று விண்வெளிக்கு பயணித்தனர். Mary 1960ம் ஆண்டுகளில் விண்வெளி செல்ல நாசாவால் (NASA) பயிற்றப்பட்டவர்.

மேற்படி New Shepard கலத்தை Blue Origin இதுவரை 15 தடவைகள் பயணிகள் இல்லது ஏவி இருந்தது. இம்முறையே பயணிகளுடன் ஏவப்பட்டது. பயணிகள் கலம் பத்திரமாக தரையை மீண்டும் parachute மூலம் அடைந்தது.

பெயர் குறிப்பிடப்படாத ஒருவர் முதல் ஆசனத்துக்கு $28 மில்லியன் செலுத்தி இருந்தாலும், இறுதி நேரத்தில் ‘நேரம் இன்மையால்’ பயணிக்கவில்லை.

செல்வந்தரான Richard Branson முதலீடு செய்து தயாரித்த Virgin Galactic என்ற தனியார் விண்வெளி கலம் கடந்த 11ம் திகதி அமெரிக்காவின் New Mexico மாநிலத்தில் இருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அவரும், அவருடன் சென்ற ஏனைய 5 பேரும் பத்திரமாக மீண்டும் தரையை அடைந்திருந்தனர்.

New Shepard:
1) நிலத்தில் இருந்து Blue Origin ஏவுகணை மூலம் ஏவப்பட்டது.
2) மொத்தம் 4 பயணிகள் சென்றனர் (விமானிகள் இல்லை)
3) 100 km உயர Karman கோட்டுக்கு மேலே சென்றது (106 km)
4) மொத்த பயண நேரம் 11 நிமிடங்கள்
5) புவியீர்ப்பு இன்று மிதக்கும் நேரம் 3-4 நிமிடங்கள்
6) Parachute மூலம் தரைக்கு இறங்கியது.

Virgin Galactic:
1) கலம் விமானம் ஒன்றின் மூலம் மேலேற்றி பின் ஏவப்பட்டது.
2) மொத்தம் 6 பயணிகள் சென்றனர் (2 விமானிகள் + 4 பயணிகள்)
3) Karman கோட்டுக்கு சற்று கீழ் (86 km) வரையே சென்றது.
4) மொத்த பயண நேரம் சுமார் 90 நிமிடங்கள்
5) புவியீர்ப்பு இன்று மிதக்கும் நேரம் 3-4 நிமிடங்கள்
6) விமான ஓடுபாதையில் விமானம் போல் இறங்கியது.

ISS என்ற சர்வதேச விண் ஆய்வுகூடம் வலம்வரும் உயரம் 400 km. பெரிய பயணிகள் விமானங்கள் பறக்கும் அதிக உயரம் சுமார் 13 km (42,000 அடி).