இன்று ஐ.நா. மெய்ப்பொருள் ஆக இறுதி சந்தர்ப்பம்

இன்று ஐ.நா. மெய்ப்பொருள் ஆக இறுதி சந்தர்ப்பம்

புதன்கிழமை ஐ.நா. செயலாளர் Antonio Guterres தனக்கு வழங்கப்பட்ட Article 99 என்ற தனித்துவமான அதிகாரத்தை நடைமுறை செய்து ஐ.நா. பாதுகாப்பு சபையை கூடி காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை அறிவிக்க கேட்டிருந்தார்.

ஐ.நா. செயலாளர் அறிவிப்பை அடிப்படியாக கொண்டு மத்திய கிழக்கு நாடான UAE பாதுகாப்பு சபையின் வாக்கெடுப்பை நடைமுறை செய்துள்ளது. அதன்படி இன்று பாதுகாப்பு சபை வாக்கெடுப்பு செய்கிறது.

அமெரிக்கா உட்பட பாதுகாப்பு சபையின் 5 நிரந்தர உறுப்பினர் நாடுகள் தமது veto வாக்கை பயன்படுத்தி பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை தடை செய்யலாம். அமெரிக்கா மீண்டும் veto அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தடை செய்யலாம்.

அவ்வாறு ஐ.நா. தலைவரின் அழைப்பை அமெரிக்கா தடை செய்தால் ஐ.நாவின் பயன் என்ன என்ற கேள்வி எழும். அத்துடன் யாரின் நன்மைக்காக ஐ.நா. இயங்குகிறது என்ற கேள்வியும் எழும்.