இன்று செவ்வாய் மீண்டும் சீனா சென்றார் கிம்

Kim_Xi

வடகொரியாவின் தலைவர் கிம் (Kim Jong-un) மீண்டும் இன்று செவ்வாய் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் சென்றுள்ளார். சீனாவின் அரச செய்தி நிறுவனம் கிம் பெய்ஜிங்குக்கு இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளது.
.
இம்முறை கிம் தனது பழைய, Ilyushin-62 என்ற ரஷ்ய தயாரிப்பு விமானமானத்திலேயே பெய்ஜிங் பறந்துள்ளார்.
.
முன் எப்போதும் இல்லாதவாறு கிம் கடந்த 3 மாதங்களில் சீனாவுக்கு மேற்கொள்ளும் 3வது பயணம் இதுவாகும்.
.
இந்த பயணத்தின் விபரங்களோ, அல்லது முன்னைய பயண விபரங்களோ இதுவரை பகிரங்கம் செய்யப்படவில்லை. முதலாவது சீனாவுக்கான பயணத்தின் போது கிம் கவசப்படுத்தப்பட்ட புகையிரதத்தில் பயணித்திருந்தார். முதல் இருதடவைகளிலும் கிம் சீன ஜனாதிபதி Xi யுடன் உரையாடி இருந்தார்.

.