இன்று முதல் பின்லாந்தும் NATO அங்க நாடு

இன்று முதல் பின்லாந்தும் NATO அங்க நாடு

பின்லாந்து (Finland) இன்று முதல் ஒரு நேட்டோ நாடு ஆகிறது. நேட்டோ அணியில் இணையும் 31 ஆவது நாடாகிறது பின்லாந்து.

பின்லாந்து நேட்டோவுடன் இணைவதால் நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எல்லை மேலும் 1,340 km ஆல் அதிகரித்துள்ளது.

யூக்கிறேன் நேட்டோ அங்கம் கொள்வதை எதிர்த்து பூட்டின் யூக்கிறேனை ஆக்கிரமித்து ஒரு ஆண்டுக்கு மேலாக யுத்தத்தில் அவதிப்பட, பின்லாந்து இலகுவில் நேட்டோ நாடாகியுள்ளது.

அதேவேளை சுவீடனும் நேட்டோ அணியில் இணைய விண்ணப்பித்துள்ளது. அந்த முயற்சியை நேட்டோ நாடான துருக்கி தடுத்து வருகிறது.

சோவியத்துக்கு போட்டியாக 1949ம் ஆண்டு ஆரம்பித்த நேட்டோ தற்போதும் ரஷ்ய எதிர்ப்பு அணியாக இயங்குகிறது.

பின்லாந்தும், சுவீடனும் நேட்டோ அணியில் இணையாத கொள்கையை நீண்ட காலமாக கொண்டிருந்தாலும், பூட்டின் யூகிறேனை ஆக்கிரமித்த பின் தமது கொள்கையை கைவிட்டு நேட்டோ அணியில் இணைய முன்வந்தன.