இன்று முதல் RCEP என்ற மிக பெரிய வர்த்தக வலயம்

இன்று முதல் RCEP என்ற மிக பெரிய வர்த்தக வலயம்

Regional Comprehensive Economic Partnership (RCEP) என்ற உலகின் மிக பெரிய வரிகள் அற்ற வர்த்தக வலயம் இன்று ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றது.

இந்த வர்த்தக வலயத்துள் 90% இறக்குமதி, ஏற்றுமதி வரிகள் விலக்கப்படும். RCEP மூலம் சீனாவே அதிக பயனை அடையும் என்று கணிக்கப்படுகிறது.

பர்மா, லஒஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, புரூணை, கம்போடியா, பிலிப்பீன், வியட்நாம் ஆகிய பத்து ASEAN நாடுகளும், சீனா, ஜப்பான், தென் கொரியா, அஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இந்த வர்த்தக வலயத்தில் பங்கு கொள்கின்றன.

உலகின் 1/3 சனத்தொகையை, 2.2 பில்லியன் மக்களை, கொண்ட RCEP நாடுகள் தம்முள் ஆண்டதோறும் சுமார் $26.2 டிரில்லியன் வர்த்தகத்தை கொண்டிருக்கும். இது உலக GDP யின் 30% ஆகும்.

இரண்டாம் நிலையில் உள்ள அமெரிக்கா-கனடா-மெக்ஸிக்கோ (USMCA) வர்த்தக வலயம் உலகின் 28% வர்த்தகத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் உலகின் 18% வர்த்தகத்தையே கொண்டுள்ளது.

இந்தியா இறுதி நேரத்தில் இந்த வர்த்தக வலயத்தில் இணைவதை தவிர்த்து இருந்தது.