இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர் காலமானார்

Tirilogachander

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களை இயக்கிய ஏ. சி. திருலோகச்சந்தர் இன்று தனது 85 ஆவது காலமானார். இவர் 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி இருந்தவர். சில திரைப்படங்களை இயக்கியது மட்டுமல்லாது, அப்படங்களின் கதைகளையும் இவரே எழுதி இருந்தார்.
.
MGR, சிவாஜி உட்பட பல முன்னணி நடிகர்களை இவர் இயக்கி இருந்தார். இவரின் “அன்பே வா” (1966), “ராமு” (1966), “அதே கண்கள்” (1967), “நானும் ஒரு பெண்” (1963) ஆகிய திரைப்படங்கள் பிரபலமானவை.
.
1962 இல் வெளிவந்த இவரின் முதல் திரைப்படமான “வீரத்திருமகன்” ஒரு ஏவிஎம் தயாரிப்பு. இவர் இறுதியாக இயக்கிய திரைப்படம் “அன்புள்ள அப்பா”. 1987 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சிவாஜி நடித்திருந்தார்.
.

“பைலட் பிரேம்நாத்”, “விஸ்வரூபம்” போன்ற படங்களையும் இவரே இயக்கி இருந்தார்.