இரண்டாம் தடவையும் சீன பங்குச்சந்தை வீழ்ச்சி

StockMarket

இன்று வியாழன் மீண்டும் சீன பங்குச்சந்தை 7% இக்கும் மேலால் வீழ்ச்சி அடைந்துள்ளது. அவ்வாற்று வீழ்ச்சி 7% இக்கும் அதிகமாக இருப்பின் அங்கு பங்குச்சந்தையை அத்தினத்துக்கு மூடி விடுதல் வழமை. அதன்படி இன்று சீன பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்குச்சந்தைகளையும் இன்று பெரிதும் பாதிக்கலாம்.
.
கடந்த திங்களும் சீனாவின் பங்குச்சந்தை இவ்வாறு வீழ்ச்சி அடைந்ததால் அத்தினத்துக்கும் மூடப்பட்டு இருந்தது. அன்றைய தினமும் வீழ்ச்சி 7% இக்கும் அதிகம் ஆகும்போது சந்தை மூடப்பட்டு இருந்தது.
.

இதனால் மசகு எண்ணெய்யின் பரல் ஒன்றுக்கான விலை 4% ஆல் விழுந்து $32.10 ஐ அடைந்துள்ளது. இது 2003 ஆம் ஆண்டில் இருந்த எண்ணெய் விலைக்கு சமமாகும்.
.