இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் Elizabeth Horst?

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் Elizabeth Horst?

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக கடமையாற்ற Elizabeth Horst என்பவரை தெரிவு செய்துள்ளார் அமெரிக்க சனாதிபதி பைடென். 

அமெரிக்க சட்டப்படி சனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்ட தூதுவர் ஒவொருவரும் அமெரிக்க காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்படல் அவசியம்.

இவரின் தூதுவர் பதிவி காங்கிரசால் உறுதி செய்யப்பட்டால் தற்போதைய தூதுவர் Julie Chung அமெரிக்கா திரும்ப Horst இலங்கைக்கான புதிய தூதுவர் ஆவார். 

Horst இதற்கு முன்னர் ஜெர்மனி, யூக்கிறேன் ஆகிய நாடுகளுக்கான அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றி, பின் Estonia என்ற நாட்டில் இடைக்கால தூதராக (ஜூலை 2018 – ஆகஸ்ட் 2019) கடைமை செய்தவர்.

தனது பதவி உறுதி செய்யப்பட்டால் தான் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார உறவை வளர்ப்பது, பாதுகாப்பை நலன்களை உறுதி செய்வது, இலங்கையின் பல்வேறு சமூகங்களுடன் உறவை வளர்ப்பது போன்ற விஷயங்களை முன்னெடுக்கவுள்ளதாக Horst கூறியுள்ளார்.