இலங்கைக்கு ஆலோசனை வழங்க Lazard, Clifford Chance

இலங்கைக்கு ஆலோசனை வழங்க Lazard, Clifford Chance

கடன் நெருக்கடியில் முறிந்துபோன இலங்கைக்கு நிதி ஆலோசனை (financial advice), சட்ட ஆலோசனைகளை (legal advice) வழங்க Lazard மற்றும் Clifford Chance ஆகிய மேற்கு நாட்டு நிறுவனங்களை அமர்த்துகிறது இலங்கை.

1848ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Lizard அமெரிக்காவின் நியூ யார்க் நகரை தளமாக கொண்டது. சுமார் 3,200 ஆலோசகர்களை கொண்டுள்ள  இதற்கு குறைந்தது 26 நாடுகளில் கிளைகள் உண்டு. 2021ம் ஆண்டில் இதன் வருமானம் $3.19 பில்லியன் ஆக இருந்துள்ளது.

Clifford Chance LLP பிரித்தானியாவின் லண்டன் நகரை தளமாக கொண்டது. இது உலகத்தில் மிக பெரியதோர் ஆலோசகர் நிறுவனமாகும். 2019-20 ஆண்டுக்கான இதன் வருமானம் சுமார் $2.5 பில்லியன் ஆக இருந்துள்ளது. சுமார் 3,300 ஆலோசகர்களை கொண்ட இது 23 நாடுகளில் கிளைகளை கொண்டுள்ளது.

இந்த ஆலோசகர்கள் இலங்கை, இலங்கைக்கு கடன் வழங்கியவர், IMF போன்ற அமைப்புகளுடன் இணைந்து கடனை முழுமையாக அல்லது பகுதியாக அடைக்க இணக்கம் கொள்வர். இறுதியில் கடன் வழங்கியவர் கணிசமான தொகையை இழப்பர்.

இலங்கையிடம் சுமார் $52 பில்லியன் கடன் இருந்தாலும், முதலில் சுமார் $12 பில்லியன் கடன் restructure இணக்கத்துக்கு உட்படலாம். அதன் பின்னரே IMF பெருமளவு உதவி வழங்க முன்வரும்.