இலங்கைக்கு Starlink மூலம் இணைய சேவை

இலங்கைக்கு Starlink மூலம் இணைய சேவை

இலங்கையில் விரைவில் Starlink செய்மதிகள் மூலமான இணைய சேவை வழங்கப்படவுள்ளது. அமெரிக்கரான Elon Musk என்பவரின் SpaceX நிறுவனத்தின் கிளை நிறுவனமானது Starlink நிறுவனம்.

ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் Starlink சேவையை அனுமதிக்காத நிலையிலும் அமெரிக்காவின் அரவணைப்பை நாடும் ரணில் அரசு Starlink சேவைக்கான உரிமையை விரைந்து வழங்கியுள்ளது.

இலங்கையில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் Sri Lanka Telecom, Dialog, Airtel போன்ற நிறுவனங்கள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில்  உள்ளது போல் Starlink இலங்கை அரசின்  கட்டுப்பாட்டில் இருக்காது. அதற்கான அறிவோ, கட்டுமானமோ இலங்கையிடம் இல்லை.

அமெரிக்க அரசின் ஆதரவுடன் ஈரான் அரசுக்கு எதிராக போராடும் குழுக்களுக்கு Starlink சட்டவிரோதமாக இணைய சேவையை வழங்கி வருகிறது.

இது ITU (International Telecommunication Union) சட்டங்களுக்கு முரணானது என்று சர்வதேச அமைப்பு தீர்ப்பு கூறியுள்ளது.

மறுபுறம் இஸ்ரேல் காசாவில் இணைய சேவையை நிறுத்திய பின்னர் இஸ்ரேல் அனுமதி வழங்கினால் மட்டுமே காசாவுக்கு இணைய சேவை வழங்க முடியும் என்று கூறி பின்வாங்கியது Starlink.

Starlink தற்போது 6,000 சிறிய செய்மதிகளை கொண்டுள்ளது. இத்தொகை விரைவில் 12,000 ஆக அதிகரிக்கும்.