இலங்கையின் மொத்த கடன் $80.5 பில்லியன்

இலங்கையின் மொத்த கடன் $80.5 பில்லியன்

வெள்ளிக்கிழமை IMF அமைப்புக்கு இலங்கை வழங்கிய தரவுகளின்படி ஜூன் மாத முடிவில் இலங்கையிடம் $80.5 பில்லியன் கடன் இருந்துள்ளது. அதில் $46.6 பில்லியன் அந்நிய நாடுகளில் இருந்து பெற்ற கடன் என்றும், சுமார் $34.0 பில்லியன் உள்ளூரில் பெற்ற கடன் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேற்படி $80.5 பில்லியன் கடன் இலங்கை GDP யின் 121.6% ஆகும்.

வெளிநாட்டு கடனில் $37.9 பில்லியன் அரசின் கடனாகவும், $5.5 பில்லியன் State-owned Enterprise (SOE) கொண்ட கடனாகவும், $3.2 பில்லியன் இலங்கை மத்திய வங்கி கொண்ட கடனாகவும் உள்ளன.

உள்நாட்டு கடனில் $32.4 பில்லியன் அரசின் கடனாகவும், $1.6 பில்லியன் SOE கொண்ட கடனாகவும் உள்ளன.

இலங்கையின் உள்நாட்டு ருபாய் கடன் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் $53.6 பில்லியன் ஆக இருந்தது. ஆனால் அது தற்போது $32.4 பில்லியன் ஆக குறைந்து உள்ளது.

கடந்த ஆண்டு டாலர் ஒன்றின் பெறுமதி சுமார் Rs 200 ஆக இருந்தது. அதனால் அப்போதைய இலங்கை ரூபா கடனை அமெரிக்க டாலரில் கணிக்கையில் $53.6 பில்லியன் ஆக இருந்தது.

ஆனால் தற்போது டாலர் ஒன்று சுமார் Rs 360 ஆக உள்ளது. அதனாலேயே கடந்த ஆண்டு $53.6 பில்லியன் ஆக இருந்த உள்நாட்டு கடன் இந்த ஆண்டு $32.4 பில்லியன் ஆக குறைந்து உள்ளது அல்லது குறைந்ததாக தெரிகிறது. இதை IFR (Inflation and Financial Repression) என்பர்.