இலங்கையின் $12 பில்லியன் தனியார் கடனுக்கு தீர்வு முன்வைப்பு

இலங்கையின் $12 பில்லியன் தனியார் கடனுக்கு தீர்வு முன்வைப்பு

இலங்கைக்கு $12 பில்லியன் bond கடன் வழங்கிய அரச சார்பற்ற தனியார் நிறுவனங்கள் முதல் முறையாக கடனை மீண்டும் அடைக்கும் திட்டம் ஒன்றை இலங்கை அரசாங்கத்துக்கு சமர்ப்பித்து உள்ளது என்று கூறப்படுகிறது.

Amundi Asset Management, Black Rock, HBK Capital Management, T. Rowe Price Associates ஆகிய நிறுவனங்கள் உட்பட சுமார் 30 சர்வதேச முதலீட்டு நிறுவனங்களே இவ்வாறு தமது திட்டத்தை முன்வைத்துள்ளன.

ஆனால் திட்ட விபரங்கள் எதுவும் இதுவரை பகிரங்கம் செய்யப்படவில்லை.

மேற்படி bond கடன் வழங்கியோரும் இலங்கை அரச அதிகாரிகளும் அமெரிக்காவின் Washington நகரில் இந்த கிழமை சந்தித்து இருந்தனர்.

அதேவேளை பிரான்ஸ், ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் Paris Club என்ற அணியின் கீழ் தமது கடனை மீள பெற திட்டம் வகுக்கின்றனர்.

மேற்படி இரண்டு திட்டங்களிலும் சீனா உள்ளடக்கப்படவில்லை.