இலங்கையில் இலஞ்சம் வழங்கிய இருவர் அஸ்ரேலியாவில் கைது

இலங்கையில் இலஞ்சம் வழங்கிய இருவர் அஸ்ரேலியாவில் கைது

சட்டவிரோத முறையில் இலங்கையில் கட்டுமான திட்டங்களை பெற இலங்கை அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கினர் என்ற குற்ற சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் அஸ்ரேலியாவில் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 67 வயது கொண்ட Panjak Patel, 71 வயது கொண்ட சொர்ணலிங்கம் ராகவன் என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் 2009ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையான காலத்தில் $190,000 (A$304,000) பெறுமதியான இலஞ்சம் வழங்கியதாக Australian Federal Police கூறுகிறது.

இந்த இலஞ்சம் இலங்கையில் A$ 14 மில்லியன் பெறுமதியான இரண்டு அபிவிருத்தி திட்டங்களை கைக்கொள்ளும் நோக்கில் வழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

மெல்பேர்ன், அஸ்ரேலியாவை தளமாக கொண்ட SMEC (முன்னர் Snowy Mountain Engineering Corporation) என்ற நிறுவனத்தின் ஊழியர்களே மேற்படி இருவரும். இவர்கள் மீதான விசாரணை 2016ம் ஆண்டு ஆரம்பமாகி இருந்தது.

1949ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் ஆரம்பத்தில் அஸ்ரேலிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் 1993ம் ஆண்டு இது தனியார் நிறுவனம் ஆகியது.

2017ம் ஆண்டு உலக வங்கியும் இந்த நிறுவனத்தையும், அதன் 4 கிளைகளையும் தடை செய்திருந்தது. அப்போதும் இந்த நிறுவனம் இலங்கையிலும், பங்காதேசத்திலும் இலஞ்சம் வழங்கியதாக உலக வங்கி கூறியிருந்தது.

இலங்கையில் இதற்கான விசாரணைகளோ அல்லது தண்டனைகளோ இதுவரை இல்லை.