இலங்கையில் மத்திய வகுப்பு வருமானம் $12,000

Dollar

Homi Kharas என்ற Brookings Institution ஆய்வாளர் பொருளாதாரத்தில் உலகின் மத்திய வகுப்பு ​தொடர்பாக ஆய்வு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவரின் ஆய்வின்படி 2020 ஆம் ஆண்டளவில் உலகின் அரைப்பங்கு சனத்தொகை மத்திய வகுப்பில் (middle class) அடங்கும் என்றுள்ளார்.

.
தற்போது உலகின் 48% சனத்தொகையினர் மத்திய வகுப்பில் அடங்குகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் 2.5% சனத்தொகையினர் பணக்கார வகுப்பில் உள்ளனர்.
.
இவரின் ஆய்வில் பொருளாதார மத்திய வகுப்பு என்பது உணவு, உடை, உறையுள் போன்ற அவசிய தேவைகளுக்கும், அவ்வப்போது தொலைக்காட்சி, வாகனம் போன்ற சிறிது ஆடம்பர பொருட்களை கொள்வனவு செய்யவும், உயர் கல்வி பயிலவும் தேவையான வருமானத்தை கொண்டவர் என்று கருதப்படுள்ளது.
.
இலங்கையில் 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்றின் வருட வருமானம் சுமார் $12,000 ஆக இருந்தால், அந்த குடும்பம் நடுநிலை மத்திய வகுப்பில் இருக்கும். அமெரிக்காவில் அந்நிலையை அடைய 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு குறைந்தது $40,000 வருமானம் அவசியம். கனடாவில் இந்நிலைக்கு $38,000 வருமானம் அவசியம். இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் மத்திய வகுப்புக்கு முறையே $11,000 மற்றும் $21,000 வருமானம் தேவை.
.
இவரின் கூற்றுப்படி 1830 ஆம் ஆண்டில் உலகில் மத்திய வகுப்பினர் இருந்திருக்கவில்லை. அப்போது அரச குடும்பங்களும், அடிமடத்தினரும் மட்டுமே இருந்துள்ளனர்.
.
அதேவேளை Pew Research அமெரிக்காவில் $42,000 முதல் $125,000 வரை வருமானம் கொண்டோரை மத்திய வகுப்பாக கணிக்கிறது. பெருநகர்களில் செலவு அதிகமாகவும், சிறு நகர்களில் செலவு குறைவாகவும் இருப்பதே இந்த வேறுபாட்டுக்கு காரணம்.

.