இலங்கையை கைவிட்டது அமெரிக்காவின் MCC உதவி திட்டம்

இலங்கையை கைவிட்டது அமெரிக்காவின் MCC உதவி திட்டம்

Millennium Challenge Corporation (MCC) என்ற அமெரிக்காவின் உதவி திட்டங்களின் கீழ் உள்ள Compact என்ற 5-ஆண்டு உதவி திட்டத்தில் இருந்து இலங்கை நீக்கப்பட்டு உள்ளது. இந்த விபரம் MCC தலைமையகத்தினால் புதன்கிழமை (2020/12/16) வெளியிடப்பட்டு உள்ளது.

தற்போதைய இலங்கை அரசு MCC திட்டம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க மறுத்துள்ளது. அந்த நிபந்தனைகள் இலங்கைக்கு பாதகமானவை என்றுள்ளது இலங்கை அரசு. அண்மையில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் Mike Pompeo இலங்கை சென்று இது தொடர்பாக உரையாடி இருந்தார். திரைமறைவில் அமெரிக்கா தனது படைகள்  விசா இன்றி இலங்கை செல்ல விசேட அனுமதியை பெறவும் முனைந்து இருந்தது.

2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி அமெரிக்க உதவி திட்டங்களில் ஒன்றான Compact திட்டத்தின் கீழ் இலங்கை உதவி பெற்று வந்திருந்தது. இந்த உதவி திட்டத்தின் மொத்த தொகை $480 மில்லியன். அந்த திட்டத்தில் இருந்தே இலங்கை தற்போது விலக்கப்பட்டு உள்ளது. பதிலுக்கு Sierra Leone என்ற ஆபிரிக்க நாடு இணைக்கப்பட்டு உள்ளது.

MCC திட்டம் உதவி பெறும் நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தல், வறுமையை ஒழித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு வழங்கப்படும்.