இலங்கை, இந்தியா வரும் Toronto நகர தலைவர்

JohnTory

கனடாவின் பெரிய நகரான Torontoவின் நகர தலைவர் (Mayor) John Tory 10 நாள் பயணம் ஒன்றை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணம் இந்த மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகும். இவருடன் இரண்டு நகர பிரதிநிதிகளும், நான்கு ஊழியர்களும் பயணம் செய்வர். அத்துடன் இவர்களுடன் மேலும் 20 வர்த்தகர்கள் தமது செலவில் பயணம் செய்வர்.
.
இவர்கள் இலங்கையில் கொழும்புக்கும், இந்தியாவில் டெல்கி, மும்பாய், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கும் பயணம் செய்வர். Jubilant Bhartia Group, Hero Industries, Tata, Paytm ஆகிய நிறுவனங்களும் இந்த பயணத்தின்போது பங்கு கொள்ளும். அத்துடன் இவர் இலங்கையின் வடக்கேயும் பயணிக்க கூடும்.
.
John Tory ஒரு Conservative கட்சியாளர் என்பதுவும், Torontoவில் உள்ள இலங்கை தமிழரில் அதிகமானோர் நீண்ட காலமாக Liberal கட்சி ஆதரவாளர்களாக இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
.

John Tory இதற்கு முன் பிரித்தானியா, பிரான்ஸ், இஸ்ரேல், சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் இவ்வகை பயணங்களை மேற்கொண்டு இருந்தார்.
.