இலங்கை உள்ளூர் விமான சேவைக்கு சீன Y-20

Y-20

இலங்கை அரசாங்கம் புதிதாக உள்ளூர் விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும், அந்த சேவையை இலங்கை விமானப்படை செயல்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை இரண்டு சீன Y-20 விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக சீன பத்திரிகை கூறியுள்ளது.
.
சீனாவின் Xian Aircraft Industrial Corporation நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த Y-20 விமானம் இந்த வருடம் ஜூலை மாதத்திலேயே முதன் முதலாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இலங்கை இந்த விமானத்தை கொள்வனவு செய்யின், சீனாவுக்கு வெளியே முதலில் Y-20 சேவையில் ஈடுபடுவது இலங்கையிலாக இருக்கும். இந்த விமானம் பயணிகள் சேவைக்கும், இராணுவ சேவைக்கும் பயன்படக்கூடியது. சீன இராணுவம் சுமார் 1,000 Y-20 விமானங்களை தனது பயன்பாட்டுக்கு கொள்வனவு செய்யவுள்ளது.
.

இலங்கை பிரதமர் ரணில் தனக்கு சீனாவின் விமானங்களின் தரத்தில் நம்பிக்கை உண்டு என்றுள்ளார். இவ்விமானங்கள் சார்பாக தெரிவிக்கையில், அவர் “they are good workhorse” என்றுள்ளார்.
.