இலங்கை சிறுவருக்கு கனடியன் சைக்கிள் ஓட்டம்

Cyclists

இலங்கையின் தென்மேற்கே அதி வறுமையில் வாழும் சிறுவருக்கு உதவும் பொருட்டு கொழும்பில் இயங்கிவரும் Rainbow Centreக்கு நன்கொடை சேர்க்க கனடியர் இருவரும், மேலும் சிலரும் ஓமானில் (Oman) சைக்கிள் ஓடியுள்ளார். கனடாவின் Calgary நகரின் Wallace King, வயது 64, மற்றும் Pat Dodge, Yuri Lipkov உட்பட 6 பேர் இந்த ஓடத்தில் பங்கு கொண்டிருந்தனர். இவர்கள் மொத்தம் $30,000 தமது நன்கொடைக்கு சேர்த்துள்ளனர்.
.
ஓமானில் இவர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 200 km வரை ஓடி, மொத்தம் 1,438 km தூரம் பயணித்து உள்ளனர்.
.
2005 ஆம் ஆண்டு கொழும்பில் (Bentota) ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறுவர் நிலையம் பிரித்தானியாவில் தனது தலைமையகத்தை கொண்டுள்ளது. ஆரம்பத்தில் இந்நிலையம் அழுத்கம பகுதி வீதி சிறுவர்களை உள்வாங்கி இருந்தது.
.