இலங்கை-சீனா சுதந்திர வர்த்தக பேச்சில் இடர்கள்

SriLankaChina

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக வலயம் அமைக்கும் நோக்கில் நடாத்தப்படும் பேசசுவார்த்தைகள் தற்போது சில இடர்களை சந்தித்துள்ளன.
.
சீனா இலங்கையுடன் காலவரை அற்ற சுதந்திர வர்த்தகத்தக உடன்படிக்கையில் ஈடுபட விரும்புகிறது. ஆனால் இலங்கை 10 வருடங்களின் பின் மீளாய்வு செய்யும் உரிமையுடன் சுதந்திர வர்த்தகதக உடன்படிக்கையில் ஈடுபட விரும்புகிறது. புதிதாக அமையவுள்ள சுதந்திர வர்த்தகம் இலங்கைக்கு பெருமளவில் பாதிப்பை உருவாக்கின், 10 வருடங்களின் பின்னான மீளாய்வு அந்த பாதிப்புகளை குறைக்க உதவும் என்பதே இலங்கையின் வாதம்.
.
மேலும் சீனா ஏற்றுமதி/இறக்குமதி செய்யப்படும் 90% பொருட்களுக்கு 0% வரியை நடைமுறை செய்யவும் விரும்புகிறது. ஆனால் இலங்கை 50% பொருட்களுக்கு மட்டும் 0% வரியை ஆரம்பத்தில் நடைமுறை செய்ய விரும்புகிறது.
.
2016 ஆம் ஆண்டில் இலங்கை $4.2 பில்லியன் ($4,200 மில்லியன்) பெறுமதியான பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. ஆனால் சீனா $211 மில்லியன் பெறுமதியான பொருட்களை மட்டுமே இலங்கையில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. அதனால் சீனா-இலங்கை வர்த்தகம் இலங்கைக்கே பாதகமாக உள்ளது.
.

அதேவேளை இலங்கை இந்தியாவுடனும் சுதந்திர வர்த்தகத்தில் ஈடுபட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. அப்பேச்சுகளும் இழுபாடுகளில் உள்ளது.
.