இலங்கை பொருளாதாரம் 1.6% ஆல் வளர்ந்தது

இலங்கை பொருளாதாரம் 1.6% ஆல் வளர்ந்தது

ஜூலை முதல் செப்டம்பர் வரையான கடந்த காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6% ஆல் வளர்ந்து உள்ளது என்று இலங்கையின் புள்ளிவிபர திணைக்களம் இன்று வெள்ளி கூறியுள்ளது.

2021ம் ஆண்டு இறுதிக்கு பின்னர் காலாண்டு ஒன்றில் பொருளாதாரம் வளர்ச்சி அடைவது இதுவே முதல் தடவை.

இந்த காலாண்டில் விவசாய துறை 3% ஆலும், சேவை துறை 1.3% ஆலும், தொழிற்சாலை உற்பத்தி 0.3% ஆலும் வளர்ச்சி அடைந்துள்ளன.

ஆனாலும் இந்த ஆண்டின் 12 மாதங்களில் பொருளாதாரம் 3.6% ஆல் வீழ்ச்சி அடையும் என்று கணிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பொருளாதாரம் 7.8% ஆல் வீழ்ச்சி அடைந்து இருந்தது.

அடுத்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 1.8% ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.