இலங்கை மத்திய வங்கி வட்டி நாளை மேலும் குறையும்?

இலங்கை மத்திய வங்கி வட்டி நாளை மேலும் குறையும்?

இலங்கை மத்திய வங்கியின் வட்டி நாளை மேலும் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. நாளைய குறைப்பு 1% முதல் 3% வரையில் இருக்கும் என்று கருதப்படுகிறது.

மத்திய வங்கி கடந்த மாதம் பாரிய 2.5% வட்டி குறைப்பை செய்திருந்தது. பொருட்களின் விலை வீழ்ச்சி அடைவதே வட்டி குறைப்புக்கு பிரதான காரணம். ஜூன் மாதம் வீக்கம் 12% ஆக குறைந்து உள்ளது.

புதிய வட்டி வீதம் நாளை வியாழன் காலை 7:30 மணிக்கு அறிவிக்கப்படும்.

இந்த ஆண்டு இலங்கை பொருளாதாரம் 2% ஆல் வீழ்ச்சி அடையும் என்று கணிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 7.8% ஆல் வீழ்ச்சி அடைந்து இருந்தது.

உள்ளூர் bond கடன் வட்டி முன்னர் 22% ஆக இருந்தாலும் தற்போது அது 12% வரையாக குறைந்து உள்ளது.