இலங்கை முருங்கை மருத்துவத்துக்கு கியூபா உதவும்

இலங்கை முருங்கை மருத்துவத்துக்கு கியூபா உதவும்

இலங்கையில் முருங்கை மரத்தை அடிப்படியாக கொண்ட மருத்துவ தயாரிப்புகளுக்கு கியூபா உதவ முன்வந்துள்ளது என்று இன்று புதன்கிழமை கூறப்பட்டு உள்ளது. கியூபாவின் இலங்கைக்கான தூதுவர் Andres Gonzalez இந்த இந்த அறிவிப்பை செய்துள்ளார்.

கியூபா முருங்கை குளிசைகள் மற்றும் முருங்கை இலை தூள் போன்றவற்றை ஏற்கனவே தயாரிக்கிறது. ஆனாலும் முருங்கை இந்தியாவில் இருந்தே உலகம் எங்கும் பரவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆங்கிலத்தில் முருங்கை காயை drumstick என்று சிலர் அழைத்தாலும், பொதுவாக Moringa என்ற தமிழ் சொல்லில் இருந்து மருவிய சொல்லே பயன்படுத்தப்படுகிறது.

முருங்கை காய் மற்றும் இலையில் பல சத்துக்கள் உள்ளன. முருங்கை விதையில் இருந்து தயாரிக்கப்படும் behenic acid கொண்ட எண்ணெய் ben oil என்று அழைக்கப்படும். முருங்கை மரத்தை இலகுவில் நோய்கள் தாக்காது. இது வெப்ப வலயத்தில் இலகுவில் வளரும்.

முருங்கை மருந்து மூலம் குணமடைந்த கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ முருங்கையை ஒரு அதிசய (miracle) மருந்து என்று கூறியிருந்தார்.

China-Cuba Moringa Oleifera Science and Technology கியூபாவில் பெருமளவு முருங்கையை நாட்டி மருந்துகளை தயாரிக்கிறது. சீனாவின் Yunnan பகுதியிலும் இப்பணிகள் நடைபெறுகின்றன.