இலங்கை வட்டி 2.5% ஆல் குறைப்பு

இலங்கை வட்டி 2.5% ஆல் குறைப்பு

இலங்கை மத்திய வங்கி வட்டியை 2.5% ஆல் குறைத்து உள்ளது. சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக இலங்கை மத்திய வங்கி வட்டி வீதத்தை குறைத்துள்ளது.

மேற்படி வட்டி குறைப்பால் இதுவரை 15.5% ஆக இருந்த deposit வட்டி 13% ஆகவும், இதுவரை 16.5% ஆக இருந்த lending வட்டி 14% ஆகவும் குறைகின்றன.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மத்திய வங்கி கடந்த ஆண்டு வட்டியை 9.5% ஆல் அதிகரித்து இருந்தது.

வட்டி வீதம் குறைய வர்த்தகங்கள் இலகுவில் கடன் பெற்று வர்த்தகத்தை விரிவு செய்ய பொருளாதாரம் வளரும் என்பதே நோக்கம்.

ஆனால் மிகையாக இருக்கும் பணம் மீண்டும் பண வீக்கத்தை தோற்றுவிக்கலாம்.