இலங்கை வரவிருந்த 6 Kg போதை கைப்பற்றல்

Thoothukudi

இந்தியாவின் தூத்துக்குடி என்ற இடத்தில் இருந்து இலங்கைக்கு கடல் மூலம் கடத்தப்படவிருந்த 6 Kg heroin இந்திய சுங்கத்தால் கைப்பற்றப்பட்டு உள்ளது. அத்துடன் 3 இந்தியரும், 4 இலங்கையரும் கைதும் செய்யப்பட்டு உள்ளனர். செய்வாய் கைதுசெய்யப்பட்ட இந்தியர் புதன் கிழமை நீதிமன்றம் எடுத்துவரப்பட்டு இருந்தனர்.
.
கடந்த ஞாயிறு பிற்பகல் இவ்வாறு போதை இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக துப்பு கிடைத்ததின் பின், இந்திய சுங்க உறுப்பினர்கள் கரையோரத்தை கண்காணித்து வந்துள்ளனர். ஒரு படகு சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணிக்க, அதை மறித்து தேடுதல் செய்துள்ளனர். அப்போது 6 kg போதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அப்படகில் இருந்த Rexon, Ashokumar, Santhiyagu ஆகிய மூவரையும் கைதும் செய்துள்ளனர்.
.

இந்த போதையை இலங்கையர் நடுக்கடலில் பெற திட்டம் உள்ளதாக இந்தியர் கூற, உடனே சுங்கம் நடுக்கடலில் தேடுதல் நடாத்தி 4 இலங்கையர்களை கைது செய்துள்ளனர். இலங்கையர் பெயர் வெளியிடப்படவில்லை.
.