இலங்கை வரும் நியூசிலாந்து தூதுவரலாயம்

NewZealand

இலங்கையில் நியூசிலாந்துக்கான தூதுவராலயம் ஒன்றை அமைக்க நியூசிலாந்து அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த செய்தியை நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் Murray McCully வெளியிட்டு உள்ளார்.
.
“Sri Lanka offers increasing value and diversity to our exports, and is a trade gateway to a fast-growing part of Asia” என்றுள்ளார் McCully.
.
நியூசிலாந்து அரசின் 2017 ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் இலங்கை தூதுவராலய நிர்மாணத்துக்கு $6.2 மில்லியன் ஒதுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் மேலும் $8.9 மில்லியன் அடுத்த 4 வருட கால செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
.

இவ்வாறு இலங்கையில் தூதுவராலயம் அமைப்பது நியூசிலாந்தின் Trade Agenda 2030 யின் ஒரு அங்கமாக உள்ளது. Trade Agenda 2030 திட்டம் அடுத்து வரும் 10 முதல் 15 வருடங்களில் நியூசிலாந்து அடைய விரும்பும் பொருளாதார கொள்கைகளை விபரிக்கின்றது.
.