இலங்கை விசாவில் சில மாற்றங்கள்

SriLanka

இலங்கைக்கான விசா வழங்கும் முறைமைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாற்றங்களை அமைச்சரவை அங்கீகாரமும் செய்துள்ளது. அந்த மாற்றங்களுள் சில பின்வருமாறு:
.
1) விசா கட்டணத்தை அமெரிக்க டாலரில் செலுத்த அனுமதிக்கப்படும்.
.
2) தமது விசா காலம் கடந்த பின் நாட்டில் இருப்போரிடம் U$500 தண்டம் அறவிடப்படும்.
.
3) இலங்கைக்கு படிக்க வரும் மாணவருக்கு அவர்களின் படிப்பு காலம் (whole academic period) முழுவதுக்குமான விசா வழங்கப்படும்.
.
4) U$500,000 அல்லது அதற்கு மேல் இலங்கையில் முதல் இடுவோர்க்கு 10 வருட வதிவுரிமை விசா வழங்கப்படும்.
.
5) வேறு நாடு ஒன்றில் குடியுரிமை பெற்ற, இரட்டை குடியுரிமை பெற முடியாத முன்னாள் இலங்கையருக்கு நிரந்தர வதிவுரிமை விசா வழங்கப்படும்.
.
இந்த தீர்மானங்கள் நடைமுறைக்கு வரும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

.